Wednesday, February 4, 2009

மழைக் கவிதைகள்



நான் மழையில் முளைவிட்ட காளான்
குடையிருந்தும் நனைகிறேன் ...
- ந லக்ஷ்மி சாகம்பரி

எது சுகம்?

எதை பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழையை பற்றி எழுதுவது சுகமா?

- வெண்ணிலா











இழந்த மழை....

இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.

முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்நீர்த்துளிகள்

நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!!

- காயத்ரி

















நீ அசைத்த கிளை
பெய்த மழை போல்
இல்லை ஒரு மழையும்................

-Unknown


























காதல் கவிதைகள்
















Tuesday, January 27, 2009

எனது கிளிக் + துணுக்கு...........



ஒற்றை பனை மரம்
மௌனமாய் மொழி பெயர்க்கிறது...........
என் வாழ்க்கையை.

வயதான காலத்தில்
குடை கூட துணையாய் ...............
பிள்ளைகள் ?????????
எங்கேனும் இருக்க கூடும்
மரமாகவோ? முடமாகவோ?

Friday, January 23, 2009

பதிவுகள்..................

அட்சயதிரிதியை
தங்கம் வாங்கினான்
கூடியது
கடன்

சனி
6- ம் வீட்டில்
புதன்
2- ம் வீட்டில்
நான் வாடகை வீட்டில்

- அ. ப. சிவா ( கருப்பு காத்து)


வலி
ஓங்கி ஒலிக்கும்
கெட்டி மேளத்தில்
அமுங்கி போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்..................
- வித்யாஷங்கர்

Thursday, January 22, 2009

படித்ததில் பிடித்தது.........

பூவின் வலி

அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
பூவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சந்தித்த
பறவையின் உதிரும் இறகுகளைப்போல
பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

-குட்டி ரேவதி













இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு…
-Unknown










யார் யாரோ அணைத்து மகிழ்ந்தாலும்
அனைத்தும் கொடுத்தாலும்
இறுதியில் அன்னையைத் தேடும்
சிறு குழந்தை போல்
உன்னையே தேடுகிறது இதயம் …
-Unknown


ஆண்டின் இறுதியில்
என்னை பார்த்து காலண்டர் கேட்டது,
என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்........
-Unknown

நான் உன்னிடம்
பேசியதை விட
நீ என்னிடம்
பேசியதை விட
நம்மைப்பற்றி
அதிகமாய் பேசுகிறது ஊர்.
-திருவைக்குமரன்.