Showing posts with label பழனிபாரதி. Show all posts
Showing posts with label பழனிபாரதி. Show all posts

Thursday, February 19, 2009

இன்று பிறந்த குழந்தைக்கு
உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்
உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி

உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்

எனது உலகத்திலிருந்து
ஏதுவுமில்லை உனக்கு

காற்றை
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்

வன்முறை அறியாத
இராணுவ வீரன்

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை

விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்

மதங்களற்ற
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை.
-பழனிபாரதி


பிள்ளையார்
வேறுங்கல்லாய்க் கிடந்த சுதந்திரம்
வடிவம் பெற்றதில் சிதைந்துவிட்டதாய்
அவர் தனித்திருக்கும் மத்தியானங்களில்
அவருக்காக நான் யோசிப்பதுண்டு.
-பழனிபாரதி


காதலின் பின் கதவு / குமரன் பதிப்பகம் / ரூ.60

Saturday, February 14, 2009

பழனிபாரதி கவிதைகள்

உறைந்த நதி

எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி

உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்

உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது.
-பழனிபாரதி