Monday, February 9, 2009

என் உலகில் உங்களுக்கும் இடம் உண்டு


நான் படித்த, எனக்கு பிடித்த கவிதைகளின் தொகுப்பு இது.

தினமும் நிலா பார்ப்பதற்க்கு நேரம் ஒதுக்குபவரா நீங்கள் ? எங்கேனும் மரம் வெட்டப்படுவதை கண்டு மனம் பதற்றம் அடைபவரா நீங்கள் ? கோடை காலத்தை ரசிப்பவர் எனினும், மழை கால வருகைக்காக ஏங்குபவரா நீங்கள் ? உங்களை கடந்து scooty- யில் யாரோ சென்ற போதும் , முன் பைக்கில் பின் சீட்டில் அம்மா மடியில் இருக்கும் குழந்தையை கண் வாங்காமல் ரசிப்பவரா நீங்கள் ? ரயில் பயணம் , ஜன்னலோர பேருந்து பயணம் என்றால் ஒரு குழந்தையை போல் குதூகலிப்பவரா நீங்கள் ? வார்த்தைகளை விட மௌனங்கள் மிகுந்த கனமானவை என்று உணர்ந்தவரா நீங்கள் ? நல்ல கவிதைகள் , சிறுகதைகள் வருமென வாரவாரம் ஆனந்தவிகடன் தவறாமல் வாசிப்பவரா நீங்கள் ? சக மனிதர்களை மிகவும் நேசிப்பவரா நீங்கள் ? இவற்றுக்கு எல்லாம் உங்கள் பதில் ' ஆம்' என்றால் , என் உலகில் உங்களுக்கும் இடம் உண்டு .

ப்ரியமுடன்
ராஜ்குமார்

Friday, February 6, 2009

நெருப்புக் கவிதைகள்


தேர் வரா வீதி
தேர் வரா வீதியெங்கள் வீதி
தேர்போலும்
வந்ததே கிடையாது பேருந்து

ஒரே ஒரு முறை பிளசர் வந்தது
செத்துப்போன லதாவை இறக்கிவிட

அதுமுதல் பிளசரின் வண்ணம்
கருப்பென்று சொல்கின்றன
குதியாட்டம் போட்ட குழந்தைகள்

டிராக்டரோ லாரியோ
ஆட்களை ஏற்றிப்போக வருவதுண்டு
மாநட்டுப் பந்தலுக்கு

மெய்யாலுமே தெரியாது
ஏரோப்பிளேனுக்கும்
எலிகாப்படருக்குமுள்ள வித்தியாசம்

எதுவும் வரத் தயங்குகிற எங்களூருக்கு
ஏன் எப்போதும் வந்து தொலைக்கிறது
பஞ்சமும் சாதிப் பிணக்கும்
- யுகபாரதி



வலியிழந்தவள்
அடி, மிதி, உதை
அஞ்சமாட்டேன்.
வெகு நேரமாகிவிடாது
போதையில் நீயிருக்கையில்
ரசத்தில் துளி விஷம்
சேர்த்துவிடவோ,
ரயிலேறி நீ தொட முடியா தூரம்
போய்விடவோ.

ஆனால்,
நீயெனக்குச் செய்யும்
சித்ரவதைகள்
உதவியாயிருக்கும் ;
எனக்கும் என் பிள்ளைக்கும்
திரும்ப நீ தேவையென்ற உணர்வு
தோன்றவிடாமலிருக்க.

- பாரதிப்ரியா






இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின்
பார்வை தவிர்க்க
பேருந்துக்கு
வெளியே பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம் எதை
எதிர்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி






கண்ணீருடன்..............

உனது தந்தையின் இறப்புச் செய்தி
ஈ- மெயிலில் வருகிறது.
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளைத் தேடிஎடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்.
உயிர் மீட்க உதவாத உனது டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரிந்த சாம்பல்கூட எஞ்சியிருக்காது.
அதனாலென்ன நண்பனே .............
இறந்துபோனவர்களுடன் தொடர்புகொள்ள
வெப்சைட் வராமலா போய்விடும் ?

-எஸ்.பாபு



Thursday, February 5, 2009

கவிதைகளா? தீப்பிழம்பா?
















Wednesday, February 4, 2009

மழைக் கவிதைகள்



நான் மழையில் முளைவிட்ட காளான்
குடையிருந்தும் நனைகிறேன் ...
- ந லக்ஷ்மி சாகம்பரி

எது சுகம்?

எதை பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழையை பற்றி எழுதுவது சுகமா?

- வெண்ணிலா











இழந்த மழை....

இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.

முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்நீர்த்துளிகள்

நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!!

- காயத்ரி

















நீ அசைத்த கிளை
பெய்த மழை போல்
இல்லை ஒரு மழையும்................

-Unknown


























காதல் கவிதைகள்