Wednesday, January 21, 2009

எனக்கு பிடித்த கவிதைகள்.......

" வீடற்ற குழந்தையொன்று
சோப்பு நுரையை ஊதியபடி
உடைத்தெறிகிறது
ஓராயிரம் உலகங்களை "

- பா. மீனாட்சி சுந்தரம்


ஒரு பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும் உன்னைப் பற்றியே கனவு காண்கிறேன்.
நீயோ பிள்ளை பெற்று பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில் உறங்கப் பழகிவிட்டாய்.
-Unknown

மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்
கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில்
யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?'எனக் கேட்டு
நிறம் மங்கியபீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும் கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.
- நா. முத்துக்குமார்















"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"
- இரா. பார்த்திபன்


"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவதுசந்தித்துக் கொள்ளட்டுமே"
-அறிவுமதி

உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை
-அய்யனார்

No comments:

Post a Comment