Sunday, February 15, 2009

பாரதி ஜிப்ரான் கவிதைகள்

காடுகளைக்
கவனி
வயல்களை
நேசி
மழையை
ரசி
வறுமையின்
பொருளை
அகராதியில்
தேடு.
-பாரதி ஜிப்ரான்



விலகாதே
விலகாதே
ஒன்றாய்ச்
சேர்.......
மழைத்துளிக்
கூட்டம்
அணையை
உடைக்கும்.
-பாரதி ஜிப்ரான்



வெய்யிலைச்
சுமந்து
நிழல் பரப்பும்
மரங்களில்
உணரலாம்
தாயின் மனசை.
-பாரதி ஜிப்ரான்


கடவுளுக்காக
மொட்டையடித்துக்
கொள்கிறான்
மனிதன்.......
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.
-பாரதி ஜிப்ரான்


புத்தகம் : முன் பனிக்காலம்/அகநி வெளியிடு/30 ரூபாய்

No comments:

Post a Comment