Friday, January 20, 2012

கல்யாண்ஜி கவிதைகள்............



சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
-கல்யாண்ஜி



தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
-கல்யாண்ஜி


நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது
-கல்யாண்ஜி


குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
-கல்யாண்ஜி



தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
- கல்யாண்ஜி

12 comments:

சென்ஷி said...

மிக அற்புதமான கணங்களை பதிவு செய்யும் நேர்த்தி மிகுந்த மிகச்சில கவிஞர்களுள் முக்கியமானவர் கல்யாண்ஜி..

அருமையான கவிதைகளை பகிர தந்தமைக்கு நன்றிகள் பல.. :-)

Anonymous said...

தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
சிறப்பான வரிகள்
உண்மைத்தன்மையான விடயங்களை கவிவரியாக வரைந்திருக்கின்றீர்கள்
இன்னும் வரட்டும் இந்த சிறியோனின் வாழ்த்துக்கள்

வனம் said...

வணக்கம்

அவருடைய அழகான கவிதைகள் போலவே நீங்கள் தேர்ந்தெடுத்த படங்களும்

நன்றி
இராஜராஜன்

Unknown said...

miga melliya...kavidhaigal....kaatchiga....
azaguku...azagu

நாடோடி இலக்கியன் said...

பகிர்விற்கு நன்றி நண்பரே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சென்ஷி said...
மிக அற்புதமான கணங்களை பதிவு செய்யும் நேர்த்தி மிகுந்த மிகச்சில கவிஞர்களுள் முக்கியமானவர் கல்யாண்ஜி..//

Repeateyy

குப்பன்.யாஹூ said...

அற்புதமான கவிதைகளை பகிர்ந்து உள்ளீர்கள்.

மிக்க நன்றி

priyamudanprabu said...

தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
////////

நலாயிருக்கு

ராஜ்குமார் said...

நன்றி பிரபு

ராஜ்குமார் said...

நன்றி இராஜராஜன்

ராஜ்குமார் said...

நன்றி ப்ரியபாரதி

ராஜ்குமார் said...

நன்றி சென்ஷி

Post a Comment